பெண் டாக்டர் - கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம் 
செய்திகள்

பெண் டாக்டர் கற்பழித்து கொலை: கொலையாளிகள் 4 பேரையும் தூக்கில் போட வேண்டும் - அதிமுக எம்.பி. ஆவேசம்

ஐதராபாத் பெண் டாக்டரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அதிமுக எம்பி கூறியுள்ளார்.

மாலை மலர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே கால்நடை பெண் டாக்டர்  பிரியங்கா ரெட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மக்களவையில் எதிர்கட்சிகள் சார்பில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்திற்கு பிறகு இதற்கு அனுமதி அளிப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.

டெல்லி மேல்சபையில் இந்த விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. அ.தி.மு.க. உறுப்பினர் விஜிலா சத்யானந்த் கூறியதாவது:-

சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயாபச்சன்:-

கற்பழிப்பு குற்றவாளிகளால் நாட்டுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்து கொல்ல வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த அரசு இதை தடுக்க என்ன செய்து கொண்டிருக்கிறது.

குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்):-

இது போன்ற குற்றங்களை தடுக்க சட்டங்கள் போதுமான அளவு இல்லை. கடுமையான சட்டங்களை உருவாக்குவதன் மூலமே இத்தகைய குற்றச் செயலை தடுக்க முடியும். இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.

ஆம் ஆத்மி உறுப்பினர் பேசும் போது, “இந்த வழக்கில் உடனடியாக நீதி வழங்க வேண்டும். தாமதிக்க கூடாது” என்றார்.

தெலுங்குதேச உறுப்பினர் கூறும்போது, “குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

அவைத்தலைவர் வெங்கயாநாயுடு கூறியதாவது:-