செய்திகள்

மகாராஷ்ட்ரா: மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

கோவாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு இன்று வந்த ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia

புதுடெல்லி:

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமான ஒன்று, கோவாவில் இருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. 

அந்த விமானம் வந்து கொண்டிருந்த போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக மும்பை விமான நிலையத்துக்கு 8.36 மணியளவில் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த விமானம் 9.18 மணியளவில் மும்பையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உடனடியாக கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பத்திரமாக உயிர் தப்பினர். 

விமான கோளாறு சரிசெய்யப்பட்டு வருகிறது. என்ஜின் கோளாறுக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia

SCROLL FOR NEXT