பாராளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பின்னர் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை முதலே வர்த்தகம் விறுவிறுப்பாக காணப்பட்டன. மும்பை பங்குச்சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சென்செக்ஸ் ஏறுமுகமாக சென்றது. 9.30 மணியளவில் 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆனது. ஜூன் 11-ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக இந்த நிலையை எட்டியது.