செய்திகள்

விவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

விவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது என்று மத்திய அரசுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

விவசாய டிராக்டர்களை ‘வணிக வாகனமாக’ மாற்றுவதற்கான இந்திய அரசின் முயற்சி வருத்தமளிப்பதாக உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் அனுபவித்து வரும் துன்பங்களுக்கிடையில் 28 சதவீத ஜி.எஸ்.டி. மற்றும் கூடுதல் அனுமதி கட்டணங்களை அவர்களால் தாங்கிக் கொள்ள இயலாது. 

எனவே விவசாயிகளின் நலன் காக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT