சாலை மறியல் 
செய்திகள்

தொடர் மின்வெட்டால் விவசாயம் பாதிப்பு - குண்டடத்தில் 7 கிராம மக்கள் சாலை மறியல்

குண்டடத்தில் தொடர் மின்வெட்டால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டதையடுத்து 7 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குண்டடம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் சோதியம்பட்டி, ராமநாதபுரம், குண்டடம், பீலிக்காம்பட்டி, நால்ரோடு, நவக்கொம்பு, கத்தாங்கன்னி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மாதகாலமாகவே அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மின் வெட்டு நேரம் அதிகரித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட 7 கிராம மக்கள் சுமார் 150பேர் நேற்று குண்டடம், தாராபுரம் ரோட்டில் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க சென்றனர். அப்போது அதிகாரிகள் அங்கு இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து விட்டு திடீரென துணை மின்நிலையம் முன்பு தாராபுரம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கோவை தாராபுரம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும் குண்டடம் போலீசார் மற்றும் குண்டடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜபூவையா ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.