பால் 
செய்திகள்

தனியார் பால் விலை மீண்டும் உயர்வு- முகவர்கள் கண்டனம்

தனியார் பால் விற்பனை விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“ஹெரிடேஜ்” பால் நிறுவனம் கடந்த 13-ந்தேதி செரிவூட்டப்பட்ட பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியது.

“ஜெர்சி பால்” நிறுவனமும் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலின் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளது.

இதற்கு பால் விற்பனை விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.