அகல் விளக்குகளை தீ மூட்டி அதனை தரம் வாரியாக பிரித்து எடுக்கும் பணியில் தொழிலாளி ஈடுபட்ட காட்சி. 
செய்திகள்

லாலாபேட்டையில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

லாலாபேட்டையில் கார்த்திகை மாதம் தொடங்கும் முன்பு, களிமண்ணால் அகல்விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

லாலாபேட்டை:

கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் கார்த்திகை மாதம் தொடங்கும் முன்பு, களிமண்ணால் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளை வண்ணம் பூசி குவியலாக அடுக்கி வைக்கப்பட்டு. தீ மூட்டி பிறகு அதனை தரம் வாரியாக பிரித்து எடுக்கும் பணியில் தொழிலாளிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து மண்பாண்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில், 

அடுத்த மாதம் ஐப்பசியில் மழை தூறும். இதனால் எங்களால் பணி செய்ய முடியாது. வெயிலில் உலர வைக்கவும் முடியாது. இதனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். தீபத் திருநாளில் சிறிய விளக்கு ஒன்றின் விலை ரூ.1-க்கும், பெரிய விளக்கு ரூ.5-க்கும் விற்பனை செய்வோம். இதனை வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்வார்கள் என்றார்.