செய்திகள்

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 3-வது யூனிட்டில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு, மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. தற்போது 4 யூனிட்டுகளிலும் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள பழைய அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதில் 3-வது யூனிட்டில் கடந்த வாரம் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருந்தது. பழுது நீக்கும் பணியும், இந்த யூனிட்டை சீரமைக்கும் பணியும் நடந்து வந்தது.

இந்த பணிகள் இன்று காலை முடிவடைந்ததை தொடர்ந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 4 யூனிட்டுகளிலும் 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.