செய்திகள்

காஷ்மீர்: ப்ளஸ் டூ தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்த அப்சல் குரு மகன்

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் 17 வயது மகன் காலிப் குரு 12-ம் வகுப்பு தேர்வில் 441 மதிப்பெண்கள் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாலை மலர்

ஜம்மு:

2001-ம் ஆண்டு பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த அப்சல் குரு என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பள்ளி கல்வி வாரியம் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதில், அப்சல் குருவின் 17 வயது மகன் காலிப் குரு, மொத்தமுள்ள 500 மதிப்பெண்ணுக்கு 441 மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் நகரில் வசித்து வரும் அப்சல் குருவின் குடும்பத்தினர், இந்த தேர்வு முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.