செய்திகள்

பட்டினி நாடுகள் பட்டியல்: மத்திய அரசை கிண்டலடித்த ராகுல்காந்திக்கு ஸ்மிருதி இராணி பதிலடி

பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றது தொடர்பாக மத்திய அரசை கிண்டல் செய்த ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி:  

பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலை, சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் சமீபத்தில் வெளியிட்டது. இதில், இந்தியா 100வது இடம் பிடித்துள்ளது.

இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, ‘‘உங்களுக்கு பசித்தால் அமைதியாக இருங்கள், உணவு கிடைக்கவில்லை என்றால் என்ன? அந்த விஷயம் பற்றி டெல்லியில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என கிண்டலாக ராகுல் குறிப்பிட்டிருந்தார்.

இதே பாணியில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ராகுலுக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, “அதிகாரப் பசி. வரி மற்றும் புள்ளிவிவரங்கள் அவ்வாறு கூறவில்லை. போதிய எண்ணிக்கையில் ஆதரவு இல்லை என்றால் என்ன? சுயநலவாதிகளை அழைத்துக் கொண்டு நாட்டை அவமதிக்க கூச்சலிடலாம். பிரதமரை ராகுல் அவமதிப்பதில் ஆச்சர்யமில்லை. அவர் நாட்டை அவமதிக்கிறார்”, என இரு டுவிட்களில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT