செய்திகள்

17 மாணவர்களை சுட்டுக்கொன்ற பின் மெக்டொனால்ட் சென்று சாப்பிட்ட கொலைகாரன்

அமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 17 மாணவர்களை கொன்ற பின்னர், கொலைகார முன்னாள் மாணவன் மெக்டோனால்ட், சப்வே உணவகத்திற்கு சென்று சாப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #FloridaSchoolShooting

நியூயார்க்:

பிரிக்க முடியாதது என்று கேட்டால் துப்பாக்கிச்சூடும், அமெரிக்காவும் என்று கூறப்படும் நிலை என்றும் மாறாதது. புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் கடந்த 14-ம் தேதி துப்பாக்கியுடன் நுழைந்த முன்னாள் மாணவன் நிகோலஸ் குரூஸ் (19) நடத்திய கோர தாக்குதலுக்கு உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 17.

ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிகோலஸ் குரூஸ், 17 உயிர்களையும் எடுத்து விட்டு பின்னர், கூட்டத்தோடு கூட்டமாக மாணவர்களோடு கலைந்து சென்றுள்ளான். பின்னர், அப்பகுதியில் இருந்த சப்வே உணவகத்திற்கு சென்று குடித்த குரூஸ், மெக்டோனால்ஸ் உணவகம் சென்று சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து, வெளியே வந்த அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட அவர் புளோரிடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெற்றோர்களை இழந்த குரூஸ் மனநிலை பாதிக்கப்பட்டவனாக தெரிகிறதாக போலீசார் தங்களது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #FloridaSchoolShooting | #NicholasCruz | #TamilNews

SCROLL FOR NEXT