புதுடெல்லி:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தேசிய தலைவர் மோகன் பக்வத் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இங்குள்ள பாலக்காடு மாவட்டத்திற்குட்பட்ட கரங்கி அம்மன் பள்ளியில் சுதந்திர தினத்தையொட்டி மோகன் பக்வத் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான தகவல் வெளியானதும் அரசு உதவிபெறும் அந்தப் பள்ளியில் மோகன் பக்வத் தேசிய கொடி ஏற்ற பாலக்காடு மாவட்ட கலெக்டர் மரிகுட்டி தடை விதித்திருந்தார். சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட மரபுகளின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே சுதந்திர தின விழாக்களின்போது பள்ளிகளில் தேசியக் கொடியை ஏற்ற முடியும் என்பதை மேற்கோள் காட்டி இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த தடையை மீறி இன்று காலை கரங்கி அம்மன் பள்ளிக்கு வந்த மோகன் பக்வத் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்து மாணவர்களிடையே உரையாற்றினார். இதற்கு அனுமதி அளித்த அப்பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று கேரளாவில் உள்ள அரசுப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றிய சர்ச்சை நீடிக்கும் நிலையில் குடியரசு தினத்தன்றும் அங்குள்ள பள்ளியில் கொடி ஏற்றுகிறார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இந்த மாதம் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்.முகாமில் பங்கேற்பதற்காக மோகன் பக்வத் வருகிறார். இந்தியாவின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் அவர் எங்கு இருக்கிறாரோ, அங்கு தேசிய கொடியை ஏற்றிவைப்பது மோகன் பக்வத்தின் பல ஆண்டுகால வழக்கமாக உள்ளது.
குடியரசு தினத்தன்று பாலக்காட்டில் தங்கி இருக்கும் மோகன் பக்வத், பாலக்காடு புறநகர் பகுதியில் உள்ள பாரதீய வித்யா நிகேதன் பள்ளியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அவர் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்தப் பள்ளி ஆர்.எஸ்.எஸ். நிர்வாகத்தால் நடத்தப்படும் பள்ளி. அரசுப் பள்ளி அல்ல என்பதால் இங்கு நடைபெறும் கொடியேற்று விழாவுக்கு உள்ளாட்சி அமைப்பினரிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டிய அவசியமில்லை என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேரள மாநில ஒருங்கிணைப்பாளர் கே.கே. பல்ராம் குறிப்பிட்டுள்ளார். #tamilnews #mohanBhagwat