ஷாகித் அப்ரிடி 
செய்திகள்

மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்- அப்ரிடி

மோடி என்ற ஒற்றை நபரால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது என அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.

மாலை மலர்

பாகிஸ்தானின் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அப்ரிடியிடம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அக்கேள்விக்கு பதிலளித்த அப்ரிடி இந்திய பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.  அப்ரிடி இதுகுறித்து பேசுகையில் ‘‘மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.

இந்த நேரத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. ஐசிசி தொடரை தவிர்த்து விளையாட ஒன்றிரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.