செய்திகள்

ஆப்கானிஸ்தான்: சேவ் தீ சில்ட்ரன் அமைப்பின் அருகே தற்கொலைப்படை தாக்குதல் - 11 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் உள்ள சேவ் தீ சில்ட்ரன் அமைப்பின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #SaveTheChildren #Afghanistan #Jalalabad

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் உள்ள சேவ் தீ சில்ட்ரன் அமைப்பின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இந்த நகரில் சேவ் தீ சில்ட்ரன் எனப்படும் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வெளியே இன்று சில தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து அப்பகுதிக்கு ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.  #SaveTheChildren #Afghanistan #Jalalabad #SuicideAttack #tamilnews