ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி 
செய்திகள்

அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று... தனிமைப்படுத்திக்கொண்ட ஆப்கானிஸ்தான் அதிபர்

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

காபூல்:

ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சுமார் 20  ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், 40 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அதிபர் அஷ்ரப் கனி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதிபரின் உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

ஆப்கானிஸ்தானில் இதுவரை 1026 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஈரானில் இருந்து மார்ச் மாதம் 1.5 லட்சம் ஆப்கானிஸ்தானியர்கள் நாடு திரும்பியபின்னர், வைரஸ் வேகமாக பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் நாடு  திரும்பியது குறிப்பிடத்தக்கது.