செய்திகள்

ஆப்கானிஸ்தான் - ராணுவம் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 17 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 17 பேர் கொல்லப்பட்டனர். #MilitantsKilled #Afghanistan

மாலை மலர்

காபுல்:

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் ஷொராப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ தளத்தில் இருந்த 40 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

இந்நிலையில், ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கன் ராணுவத்தினர் இன்று தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 2 மூத்த தளபதிகள் உள்பட 17 பேர் பலியாகினர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். #MilitantsKilled #Afghanistan