கைது 
செய்திகள்

அடையாறில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேர் கைது

அடையாறில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை:

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் 5-வது அவென்யூவில் வசித்து வருபவர் பாரதி. கடந்த 14-ந்தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு திருச்சிக்கு பாட்டியின் நினைவஞ்சலிக்காக சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சாஸ்திரி நகர் போலீசார் விசாரித்து வந்தனர். கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் குற்றவாளிகள் திருப்பூரைச் சேர்ந்த கொள்ளையர்கள் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து. சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். ஒருவன் பெயர் வன்னி கருப்பு விருதுநகரை சேர்ந்தவன். மற்றொரு குற்றவாளி சுரேந்திரன் என்ற ராஜ் மதுரையை சேர்ந்தவன் இருவரும் சிவகங்கை மற்றும் மதுரை, திருப்பத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். 10-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரியவந்தது.

இருவரிடமிருந்து 40 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலாங்கரை பகுதியிலும் வீட்டை உடைத்து கைவரிசை காட்ட முயற்சி செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.