செய்திகள்

கிருஷ்ணகிரியில் வக்கீல்கள் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்

வக்கீலை போலீஸ் தாக்கியதை கண்டித்து கிருஷ்ணகிரியில் வக்கீல்கள் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ளது கிட்டம்பட்டி. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நின்று கொண்டிருந்த வக்கீலை போலீஸ் ஒருவர் விசாரித்தார்.

அந்த நேரம் வக்கீலை போலீஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து கிருஷ்ணகிரியில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றும் (புதன்கிழமை) வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். வக்கீலை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.