சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்திய தண்டனை சட்டம் 597-வது பிரிவில் தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்கிறது. பெண்ணுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர்.
அப்போது ஆணுக்கு மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கும் 597-வது பிரிவு ரத்து செய்யப் படுவதாகவும் தகாத உறவு குற்றம் இல்லை என்றும் பரபரப்பு தீர்ப்பளித்தனர்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-
கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல. ஆணுக்கு பெண் சமம். இதில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விரோதம் ஆகும். ஆணுக்கு சமமாக பெண்களையும் நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது சட்ட விதிமீறல் ஆகும்.
கணவன்-மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவு காரண மாகிறது. தகாத உறவு விஷயத்தில் அதில் யாரும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் அது குற்றம் இல்லை. தகாத உறவில் விவாகரத்து நடக்கலாம். யாரும் தற்கொலைக்கு தூண்டப்படக்கூடாது.
திருமணமான பெண் கணவருடன் மட்டுமல்ல, வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் அது குற்றம் இல்லை. மேற்கு ஐரோப்பா மற்றும் சீனாவில் தகாத உறவு குற்றம் இல்லை. எனவே ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் 597-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அது ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார். #Adultery #Section497 #SupremeCourt