ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 
செய்திகள்

தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் அவரவர் வீடுகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் காங்கயம் அருகிலுள்ள கட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், முன்னாள் எம்.பி சிவசாமி, அவைத் தலைவர் பழனிச்சாமி, அம்மா பேரவை மாநிலத் துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், பேரவை மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, மாணவரணி செயலாளர் சதீஷ் குமார், அண்ணா தொழிற்சங்கத்தினர் கண்ணபிரான், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என் பழனிச்சாமி, பகுதி செயலாளர் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சடையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமையில் திருப்பூர் குமார் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் கலந்து கொண்டார். கோட்டயத்தில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பகுதியில் அன்பகம் திருப்பதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மடத்துக்குளம் எம்.எல்.ஏ.,மகேந்திரன் தலைமையில் மடத்துக்குளத்தில் அ.தி.மு.க.வினர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பல்லடத்தில் பனப்பாளையம் தனியார் விடுதி முன்பு நகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வைஸ் பழனிச்சாமி, சூ.தர்மராஜ், பானு, பழனிசாமி, சரளை விக்னேஷ், சித்ராதேவி, லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்லடம் ஒன்றிய முன்னாள் எம்.எல்.ஏ., க்கள், கரைப்புதூர் நடராஜன், கே.பி. பரமசிவம், ஒன்றிய செயலாளர் சித்துராஜ் ஆகியோரின் தலைமையில் அந்தந்த பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.