செய்திகள்

நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் அதிமுக எம்பிக்கள் சந்திப்பு

கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க கோரி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து வலியுறுத்தினார்கள். #GajaCyclone #ArunJaitley #ADMKMPs

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஏராளமான பேர் வீடுகளை இழந்ததுடன், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை, பலா மரங்களும் சாய்ந்து விழுந்தன. ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நாசமானது.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு பொதுமக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். தமிழக அரசும் ரூ.1000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறும்போது, கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட இன்னும் ஒதுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

SCROLL FOR NEXT