செய்திகள்

ஜெயலலிதா பிறந்த நாளில் வெளியாகும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடு

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு, "நமது புரட்சித்தலைவி அம்மா" தமிழ் நாளிதழ், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 முதல் தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழும், ஜெயா டி.வி.யும் டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் கட்சிக்கு புதிதாக நாளிதழும், தொலைக்காட்சியும் தொடங்க திட்டமிடப்பட்டது. அதன்படி அ.தி.மு.க. பேச்சாளரான ஜெய கோவிந்தன் நடத்தி வந்த நமது புரட்சித்தலைவி அம்மா என்ற நாளிதழை கட்சிக்கு வாங்கப்பட்டது. இந்த நாளேடு ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி முதல் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதனை தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT