சென்னை:
முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாசலம், பழனியப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் கடந்த சில தினங்களாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று அவர்கள் 3 பேரும் தலைமை செயலகத்துக்கு வந்தனர். அவர்களுடன் மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.
தொகுதி மேம்பாடு திட்டங்கள் தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடியிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.