சென்னை:
அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனவரி 3-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8-ம் தேதி சட்டமன்றம் கூட உள்ள நிலையில், அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனவரி 3-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல் முறையாக கூட உள்ள சட்டமன்ற கூட்டத்திற்கு முன்னதாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#ADMK #MLAmeeting