சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நிதித்துறை பொறுப்பு வகிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதன்பிறகு மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடக்கிறது. இதில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது. #Tamilnews