அதிமுக எம்எல்ஏ செம்மலை 
செய்திகள்

அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் பேச வேண்டும்- அதிமுக எம்எல்ஏ

அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை கூறியதாவது:-

பழிவாங்கும், அரசியல் நோக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் ஏற்கனவே தந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.