அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செய்தித் தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் தமிழக தேர்தல் அதிகாரியிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:-
முதலமைச்சரை ஒருமையில் பேசியும், உண்மைக்கு மாறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பியும், பல்வேறு விவகாரங்கள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சித்தும், அவசர கால ஊர்திகளுக்கு வழிவிடாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி டி.டி.வி. தினகரன் செயல்படுகிறார்.