செய்திகள்

தினகரன் அணியின் கொடிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. வழக்கு

டி.டி.வி. தினகரன் அணியின் கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #ADMK

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சி பெயரையும், கொடியையும், இரட்டை சின்னத்தையும் பெறுவதற்கு செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இதனால் அவர் புதிய கட்சி தொடங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று அவர் மதுரையில் புதிய கட்சியை தொடங்கினார்.

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று அவர் தனது புதிய கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். மேலும் புதிய கொடியையும் அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த கொடி அ.தி.மு.க. கொடி போன்றே உள்ளது. கருப்பு, வெள்ளை, சிவப்பு, மத்தியில் ஜெயலலிதா உருவப் படம் பொறிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய கொடிக்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT