முத்தமிழ்ச்செல்வன் -ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் 
செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில்  விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர்.