சென்னை:
நாளை அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:
* அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி.
* பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்.
*கட்சி தொண்டர்கள் 2021 சட்டசபை தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும்.
* அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான சாதனையை படைப்போம்.
* பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம். அதிமுக பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.