செய்திகள்

வெங்கையா நாயுடு வகித்து வந்த பொறுப்புகள் நரேந்திர சிங் தோமர், ஸ்மிருதி இரானிக்கு ஒதுக்கீடு

துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த நகர்புற மேம்பாடு, தகவல் ஒலிபரப்பு துறைகள் முறையே நரேந்திர சிங் தோமர்ஸ்மிருதி இரானிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

நகர்புற வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த வெங்கையா நாயுடு துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், அவர் வகித்து வந்த 2 துறைகள் காலியானது. 

இந்நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த பொறுப்புகள் நரேந்திர சிங் தோமர், ஸ்மிருதி இரானிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நகர்புற மேம்பாட்டு துறை பொறுப்பு கிராமப்புற மேம்பாட்டு துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கும், தகவல் ஒலிபரப்பு துறை பொறுப்பு ஜவுளித் துறை மந்திரி ஸ்மிருதி இரானிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளது. மத்திய மந்திரிசபையில் பெரிய அளவிலான மாற்றம் நடைபெறும் புது முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கம் கூடுதல் பொறுப்புகள் மூத்த மந்திரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.