செய்திகள்

பிரதமர் மோடி யார் கிரிடிட் கார்டில் ரூ.13 லட்சத்துக்கு கோட் வாங்கினார்?- நடிகை ரம்யா கேள்வி

பிரதமர் மோடி யார் கிரிடிட் கார்டில் ரூ.13.6 லட்சத்துக்கு கோட் வாங்கினார்? என்று காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைவரும், நடிகையுமான ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். #ActressRamya #Modi

கர்நாடகாவில் வருகிற 12-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.

இங்கு காங்கிரஸ்- பா.ஜனதா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேபோல் சமூக வலைதளங்களிலும் காங்கிரஸ்-பா.ஜனதா இடையே கடும் மோதல் நடக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைவரும், நடிகையுமான ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மோடி புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றார். பெர்லின் விமான நிலையத்தில் அவர் தரையிறங்கிய போது எடுக்கப்பட்ட படத்தை ரம்யா வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் மோடி அணிந்திருந்த லோரோ பியானா ஆடையின் மதிப்பு ரூ.13.6 லட்சம் ஆகும்.


இந்த ஆடையை விமர்சித்து ரம்யா தனது கருத்தையும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. நீங்கள் அணிந்துள்ள கோட் மிகவும் பேன்சியாக உள்ளது.

SCROLL FOR NEXT