செய்திகள்

நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் அறிவிப்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly

மாலை மலர்

தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழ் சினிமாவில் நடிப்பின் களஞ்சியமாக போற்றப்பட்டு வரும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.