தென்னாப்பிரிக்காவில் உலக அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நடைபெறுகிறது. இதன் ஒரு அணியை நடிகர் ஷாருக்கான் வாங்கியுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான அவர் கேப்டவுன் அணியை வாங்கியுள்ளார். இந்த அணியில் நட்சத்திர வீரரான டுமினி உள்ளார்.
இதேபோல டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளரான ஜி.எம்.ஆர்.ஸ்போர்ட்ஸ் ஜோகன்ஸ்பாக் அணியை வாங்கியுள்ளது. இதன் நட்சத்திர வீரராக ரபடா உள்ளார்.
இதேபோல பாகிஸ்தான் பிரிமீயர் ‘லீக்’ அணியை வாங்கிய 2 பேர் தென்னாப்பிரிக்க தொழில் அதிபர்கள். 2 பேர் மற்ற அணிகளை வாங்கியுள்ளனர்.
டிவில்லியர்ஸ் பிரிடோரியா அணிக்கும், ஹசிம் அம்லா டர்பன் அணிக்கும், குயின்டன் டிகாக் பெரோனி அணிக்கும், டேவிட் மில்லர் புளோயம் பாண்டின் அணிக்கும், இம்ரான் தாகீர் போர்ட்ஸ் எலிசபெத் அணிக்கும் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.