சிந்துநதி பூ, நேசம் புதுசு, பாரதி கண்ணம்மா படங்களில் நடித்தவர் நடிகர் ரஞ்சித். அ.தி.மு.க.வில் இருந்த அவர் கடந்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 27-ந் தேதி பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தார்.
பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் விலகியதாக பேட்டி அளித்தார். தேர்தலின் போது அ.ம.மு.க.வில் ஏற்பட்ட கடுமையான கசப்பான அனுபவங்களால் அந்த கட்சியில் இருந்து தற்போது ஒதுங்கியே இருப்பதாகவும் நடிகர் ரஞ்சித் விரைவில் அ.ம.மு.க.வில் இருந்தும் வெளியேறுகிறார் என்று இணையதளங்களில் செய்தி பரவியது.
கடந்த ஒரு வாரமாக பரவிய செய்திக்கு ரஞ்சித் இன்று விளக்கம் அளித்துள்ளார். முகநூல் நேரலையில் அவர் பேசியதாவது:-
கடந்த ஒரு வாரமாக என்னைப்பற்றி வந்த செய்திகள் சங்கடத்தை ஏற்படுத்தியது. நான் அ.ம.மு.க.வில் தான் இருக்கிறேன். நான் எதையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை.