நடிகர் ரஞ்சித் 
செய்திகள்

அ.ம.மு.க.வில் இருந்து நடிகர் ரஞ்சித் விலகல்?

தேர்தலின் போது அ.ம.மு.க.வில் ஏற்பட்ட கடுமையான கசப்பான அனுபவங்களால் அந்த கட்சியில் இருந்து ஒதுங்கியே இருக்கும் நடிகர் ரஞ்சித் விரைவில் அக்கட்சியில் இருந்து வெளியேறுகிறார் என்று இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மாலை மலர்

சிந்துநதி பூ, நேசம் புதுசு, பாரதி கண்ணம்மா படங்களில் நடித்தவர் நடிகர் ரஞ்சித். அ.தி.மு.க.வில் இருந்த ரஞ்சித் கடந்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 27-ந்தேதி பா.ம.க.வில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தார். பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் விலகியதாக பேட்டி அளித்தார்.

தேர்தலின் போது அ.ம.மு.க.வில் ஏற்பட்ட கடுமையான கசப்பான அனுபவங்களால் அந்த கட்சியில் இருந்து ஒதுங்கியே இருக்கும் நடிகர் ரஞ்சித் விரைவில் அ.ம.மு.க.வில் இருந்தும் வெளியேறுகிறார் என்று இணையதளங்களில் செய்தி வருகிறது.

இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:-

அ.ம.மு.க.வில் இணைந்த பின்னர் கடந்த தேர்தலுக்கு தானாகவே பல மாவட்டங்களுக்கு பிரசாரத்துக்கு சென்றார். ஆனால் எந்த மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் ரஞ்சித்தை வரவேற்கவோ, இந்த இடத்தில் பேசுங்கள் என்று திட்டமிட்டு கொடுக்கவோ இல்லை. யாரும் ரஞ்சித்தை கண்டுகொள்ளவும் இல்லை. அதையும் தாண்டி தானாக தன் சொந்த செலவில் தினகரனுக்காக பிரசாரம் சென்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆனாலும் ரஞ்சித் தி.மு.க.வுக்கு செல்வதா, பா.ஜனதாவுக்கு செல்வதா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் என்றும் ஆனால் அ.ம.மு.க.வில் இருந்து விலகுவதில் உறுதியாக இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.