ராதாரவி 
செய்திகள்

பா.ஜனதா கட்சி ஒரு என்ஜின் போன்றது- நடிகர் ராதாரவி

பா.ஜனதா கட்சி என்ஜின் போன்றது. மீதி கட்சிகள் ரெயில் பெட்டிகள். என்ஜின் இல்லாமல் யாரும் பெட்டியில் ஏறி பயணம் செய்ய முடியாது என்று நடிகர் ராதாரவி கூறினார்.

மாலை மலர்

ஈரோடு:

காங்கயம் அருகே உள்ள குண்டடத்தில் பாரதிய ஜனதா கூட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட தலைவர் பொன்.ருத்ரகுமார் தலைமை தாங்கினார்.

இதில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா காலடி எடுத்து வைக்கும். குடியுரிமை சட்ட திருத்தத்தை பற்றி யாரும் பயப்பட வேண்டாம். இது பற்றி தவறான நோக்கத்திலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இந்த சட்டம் காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல. நான் முஸ்லீம் கல்லூரியில் படித்தவன். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி வந்தவர்களைதான் இந்த சட்டம் வெளியேற்றும். எனவே நம் நாட்டினர் அச்சப்பட தேவையில்லை.

பாரதிய ஜனதா கட்சி என்ஜின் போன்றது. மீதி கட்சிகள் ரெயில் பெட்டிகள் ஆகும். என்ஜின் இல்லாமல் யாரும் பெட்டியில் ஏறி பயணம் செய்ய முடியாது.

இந்தியாவில் இன்னும் 15 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமர் இன்று காஷ்மீரிலும் மக்கள் நிம்மதியாக உறங்குகிறார்கள். இதற்கு காரணம் குடியுரிமை திருத்த சட்டம் தான்.

இப்படி ஒரு நல்ல சட்டம் தான் முதலில் மக்கள் சிரமப்படுவதாக தெரியும். பிறகு மக்களே பாராட்டுவார்கள்.

இவ்வாறு ராதாரவி கூறினார்.