செய்திகள்

ஹேமமாலினியை ஆதரித்து கணவர் தர்மேந்திரா தீவிர பிரசாரம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் நடிகை ஹேமமாலினியை ஆதரித்து அவரது கணவர் தர்மேந்திரா தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். #LokSabhaElections2019 #Dharmendracampaigns #HemaMalini #Mathuracampaign

மாலை மலர்

பாலிவுட் சினிமாக்களில் 1970 மற்றும் 1980-களில் பிரபல முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார்.

முன்னர் இந்திப்பட ரசிகர்களால் ‘கனவுக் கன்னி’ (டிரீம் கேர்ள்) என்றழைக்கப்பட்ட ஹேமமாலினி(70) இந்த தேர்தலிலும் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்த தொகுதி மக்களுக்கு நான் ஆற்றியுள்ள பணிகள் மற்றும் பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்து வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஹேமமாலினியின் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.