கோப்புபடம் 
செய்திகள்

ஜே.இ.இ., தேர்வில் திருப்பூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

பல்லடம் - கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர் பத்ரிநாராயணன் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருப்பூர்:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி., என்.ஐ.டி., இளநிலை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க, ஜே.இ.இ., பிரதான தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். நடப்பாண்டு தேர்வு ஆகஸ்டு மாதம் நடந்தது.

திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களில் 10 பேர் எழுதினர். இதில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வகுமார் 71.01 சதவீதம் மதிப்பெண் மற்றும் பல்லடம் - கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர் பத்ரிநாராயணன், 71.98 மதிப்பெண் பெற்று  அட்வான்ஸ்டு தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

இதுகுறித்து செல்வகுமார் கூறுகையில், நானே சுயமாக படித்து தயாரானேன். கணித ஆசிரியர் சதீஷ் உறுதுணையாக இருந்தார். அடுத்து அட்வான்ஸ்டு தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் ஐ.ஐ.டி., அல்லது என்.ஐ.டி.,யில் இடம் கிடைக்கும் என்றார்.

பத்ரிநாராயணன் கூறுகையில், பள்ளியில் இருந்தே அரசு வழங்கிய  பயிற்சியில் பங்கேற்றேன். ஊரடங்கு சமயத்திலும் வாரத்தில் இரு நாட்கள் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் அடுத்த தேர்வுக்கான கட்டணங்கள், ஜே.இ.இ., பிரதான புத்தகம், அட்வான்ஸ்டு புத்தகங்கள் வழங்கினர். நீட் தேர்வும் எழுதியுள்ளேன். மருத்துவம் தான் கனவு. கிடைக்காவிட்டால் ஐ.ஐ.டி.,யை தேர்வு செய்வேன் என்றார்.