செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே வாலிபர் விபத்தில் பலி

கிருஷ்ணகிரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் வெங்கடாசலம் (வயது 29). இவர் நேற்று மாலை தனது மொபட்டில் திருவண்ணாமலை சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அடையாள தெரியாத வாகனம் ஒன்று வெங்கடாசலம் ஓட்டிவந்த மொபட்டு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவலறிந்த கந்தி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.