செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதிலி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

மாலை மலர்

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரம் பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் ரவீன் (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு ரவீன் காளப்பன் நாயக்கன்பட்டியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு 11 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார். குப்பநாயக்கனூர் எனும் இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் பலத்த அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவீனை மீட்டு பொதுமக்கள் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.