தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை அடுத்த திப்பம்பட்டி கூட்டுரோடு உள்ளது. இந்த கூட்டுரோட்டில் இருந்து தர்மபுரி செல்லும் பாதையில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்துக்கு அடியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் கிடந்தார். அவரது அருகில் அவர் வந்த இருசக்கர வாகனமும் கிடந்தது.
விபத்தில் காயம் அடைந்த வாலிபரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.
புளு கலரில், வெள்ளை கட்டம்போட்ட லுங்கியும், மஞ்சளும், புளுவும் கலந்து முழுக்கை சட்டையும் அவர் அணிந்திருந்தார். அவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் கிருஷ்ணாபுரம் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். அவரது புகைப்படத்தை மற்ற போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.