கொழும்பு:
இலங்கையின் கிளிநொச்சி பகுதியில் இன்று மதியம் 1.45 மணிக்கு ராணுவ வீரர்கள் சிலர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். கிளிநொச்சி மற்றும் முருகண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள தண்டவாளத்தை ராணுவ வாகனம் கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் ராணுவ வாகனத்தின் மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.