செய்திகள்

கீழக்கரையில் வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

கீழக்கரையில் அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

மாலை மலர்

கீழக்கரை:

கீழக்கரை அலவாக்கரையைச் சேர்ந்தவர் பொன்ராஜ். வயர்மேன். இவரது மகன் நாக அர்ஜூன் (வயது 19). கீழக்கரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக் கொண்டு தனியார் நிறுவனத்தில் பகுதிநேர பயிற்சி பெற்று வந்தார்.

நேற்று இரவு இவர், பயிற்சியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

ஏர்வாடி முக்கு ரோடு அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாக அர்ஜூன், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பைக் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.