டாக்கா:
வங்கதேசத்தில் சாட்டோகிராம்- காக்ஸ் பஜார் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை, பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி பஸ் சென்றுகொண்டிருந்தது. லோககாரா உபாசிலா என்ற இடத்தில் சென்றபோது, மினி பஸ் மீது எதிரே வந்த மற்றொரு பஸ் பயங்கரமாக மோதியது. இதில் மினி பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் மினி பஸ்சில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். #BangladeshAccident