செய்திகள்

உ.பி.: தண்டவாள விரிசல் - கேட்மேன் சாமர்த்தியத்தால் பெரிய ரெயில் விபத்து தவிர்ப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்பூரில் இருந்து காஜிப்பூர் செல்லும் ரெயில் தடத்தில் தண்டவாள விரிசலால் ஏற்படவிருந்த விபத்து கேட்மேனின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது.

மாலை மலர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஜான்பூரில் இருந்து காஜிப்பூருக்கு ரெயில்வே பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 92 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள கேட்மேன் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தார்.

அப்போது, ஜான்பூரில் இருந்து காஜிப்பூர் செல்லும் ரெயில் தடத்தில் சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர் உடனடியாக விரைந்து சென்று சரக்கு ரெயிலுக்கு முன் சிவப்பு கொடியை காட்டினார். இதைத்தொடர்ந்து, சரக்கு ரெயிலின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இதனால் ஏற்படவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது குறித்து விசாரணை நடைபெறும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.