செய்திகள்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஏ.சி.சண்முகம் பாராட்டு

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

புதிய நீதிகட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே’ என்பதை மனதில் இருத்தி அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

இந்த இணைப்பிற்கு காரணமாக இருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று கூறி உள்ளார்.