ஏ.சி.சண்முகம் 
செய்திகள்

ஹோலி பண்டிகை- ஏ.சி.சண்முகம் வாழ்த்து

தமிழ்நாட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் புதிய நீதிக் கட்சியின் சார்பில் ஏ.சி.சண்முகம் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மாலை மலர்

சென்னை:

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள ஹோலி பண்டிகை வாழ்த்து செய்தி வருமாறு:-

“ஹோலிகா” என்ற அரக்கியை திருமால் அழித்த நாளை ஹோலி பண்டிகையாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை பூசியும், வண்ண நீரை ஊற்றியும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இந்த விழா இந்தியா மட்டுமின்றி நேபாளம், வங்கதேசம், கயானா, தென் ஆப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, இங்கிலாந்து போன்ற இந்து மக்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் இவ்விழாவை கொண்டாடும் அனைவருக்கும் புதிய நீதிக் கட்சியின் சார்பில் ஹோலிப்பண்டிகை நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.