அபிஷேக் சிங்வி 
செய்திகள்

நல்லது நடந்தால் மோடினாமிக்ஸ்.. கெட்டது நடந்தால் நிர்மலானாமிக்ஸ்.. -சிங்வி தாக்கு

ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கத்தினை தாக்கி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கருத்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

மேலும், ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில்,  ‘ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு ஊபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன.

பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர்களை தாண்டிவிடும் என்றால் எப்படி?. இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. இதற்கும் எதிர்கட்சிதான் காரணம் என கூறுவீர்களா? ஊபர், ஓலாதான் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டார்களா?.