செய்திகள்

அபிநந்தன் போர் விமானத்தில் மீண்டும் பறப்பது எப்போது?: விமானப்படை தளபதி பேட்டி

கோவையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா, விங் கமாண்டர் அபிநந்தன் மீண்டும் பணிக்கு திரும்புவது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். #Abhinandan #Abhinandanmedicalfitness #AirChiefMarshal #BSDhanoa

மாலை மலர்

பாகிஸ்தானிடம் சிக்கி விடுதலையான விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சில பரிசோதனைகளுக்காகவும், சிறப்பு சிகிச்சைக்காவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை விமானப்படை தளபதி பிஎஸ் தனோவா இன்று பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளித்தார்.